தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் 23 A.e. தூரத்தைக் கடந்ததும் வரகூர் வேங்கடேசப் பெருமாள் எனும் நுழைவாசல் வளைவினைப் பார்க்கலாம். கண்டியூர், திருப்பூர்ந்துருத்தி, கருப்பூர் இவற்றை அடுத்துள்ள தலம் இது. ப்ரதான சைலையிலிருந்து 1A.e. தூரத்தை வயல் சூழ் சாலையில் நடந்தால் வரகூர் ஆலயத்தை அடையலாம். முதலில் சிவாலயமான கைலாசநாதர் கோயிலும், அதற்கு வெகு அருகிலேயே வேங்கடேசர் கோயிலும் உள்ளன. இந்த ஸ்தலத்திற்கு வராஹபுரி என்று பெயர்.

க்ருஷ்ண லீலா தரங்கிணி என்ற சங்கீத நூலை இயற்றிய மஹான் நாராயணத்தீர்த்தரோடு தொடர்பு உடைய ஊர் இது. கடும் வயிற்று வலியினால் தீர்த்தர் அவதிப்பட்டபோது பகவான் ஸ்ரீநிவாசர் அவர் கனவில் தோன்றி காலையில் எழுந்தவுடன் கண்ணில்படும் முதல் நபரின் சென்றால் நோய் தீரும். என்று கூரினார். அதன்படி காலையில் அவர் கண்விழித்ததும் எதிர்பட்ட ஒரு வராஹத்தின் பின்னால் செல்ல, அது இந்த ஊருக்கு வந்தத்தும் மறைந்து போய் விட்டது. தீர்த்தத்தின் வயிற்று வலியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து, ஸ்ரீதீர்த்தருக்கும் அவ்விடத்திலேயே ஸ்ரீநிவாசப் பெருமாளின் தரிசனமும் கிட்டியது. அங்கே தோன்றிய கோயிலே தற்போது உள்ள வேங்கடேசப் பெருமாள் கோவில்.

கேரளாவில் உள்ள வழிபாட்டு முறைபோல் இக்கோவில் ஸந்நிதிக்கு ஆண்கள் மேலாடை அணியக்கூடாது. ஸந்நிதிக்கு முன்னர் நாராயண தீர்த்தர் அமர்ந்து பாடிய மேடை உள்ளது. அதன் மேல் கால்கள் படவோ அல்லது நடக்கவோ கூடாது. பஞ்சகச்சம் அணிந்த க்ருஹஸ்தருக்கே சடாரி ஸாதிக்கப்படும். இங்கு வடகலை ஸம்ப்ரதாயம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது வேங்கடேசர் கோயில் என்று புகழ் பெற்றாலும், இங்கு மூலவராக எழுந்தருளி இருப்பவர் மஹாலக்ஷ்மியை மடியில் அமர்த்தி வீற்றிருக்கும் லக்ஷ்மி நாராயணப் பெருமாளே. அவரது கிரீடம் மிகவும் அழகாக விளக்கி நம்மை ஈர்க்கிறது. உற்சவ மூர்த்தியாக வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழிலாக ஸேவை ஸாதிக்கிறார். லக்ஷ்மி நாராயணர் விற்றிருந்தும், வேங்கடேசப் பெருமாள் நின்றும் காட்சி அளிக்கிறார்.

கருடாழ்வாரும், ஆஞ்சனேயரும் இருக்கிறார்கள். தனித் தாயார் சந்நிதி கிடையாது. ஸந்நிதி மேற்புறம் விதானத்தில் பச்சை வண்ணராக ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். கோபுரத்தில் தசாவதார சிற்ப்பங்கள் உள்ளன.