அக்டோபர் 27 தேதி முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரை கந்த சஷ்டி விழா கொண்டாடப் படுகிறது. நவம்பர் முதல் தேதி சூர சம்ஹாரம், இரண்டாம் தேதி திருக்கல்யாணம்

kandakottam temple
Kandakottam Temple

தாமரை புரியும் காமர் சேவடி
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே
( குறுந்தொகை வாழ்த்துப் பாடல் )

malaysia murugan temple
Malaysia Murugan Temple

நல்லார்கள் வாழவும் பொல்லார்கள் வீழவும் அறம் தழைக்கவும் இறைவன் அவ்வப்பொழுது வடிவெடுக்கிறான். அவனுடைய அறக்கருணை மறக்கருணை இரண்டுமே அப்போது வெளிப்படுகின்றன. தாரகன், சிம்மமுகன், சூரபத்மன் ஆகிய அசுரர்களின் கொடுமைகளை அழிக்கவும் அவலமுற்ற தேவர்களின் வாழ்வை சீர் செய்யவும் சிவபெருமான் முருகனைப் படைத்தார். கச்சியப்ப சிவாச்சாரியாரின் சொற்களில் முருகனை நோக்குவோம்.

nalloor murugan temple
Nalloor Murugan Temple

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்க்; பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அது ஓர் மேனியாகக் கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்ட ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய (கந்த புராணம் 942)

Swami Malai
Swami Malai

முருகு என்றால் அழகு. முருகன் அழகன்....தமிழ்க் கடவுள். .குறிஞ்சிக் கிழவோன். குன்றுதோறாடும் குகன். மொய் தார் அணி குழல் வள்ளியை வேட்டவன். முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன். தாரகனையும் சிம்மமுகனையும் வதம் செய்த முருகன் சூரன் செய்த மாயைகளை களைந்து , அளவற்ற கருணையினாலே அவனைத் தன்னுடைய ஊர்தியாகவும் ( மயில் ) தன் கொடியாகவும் ( சேவல் ) மாற்றி அருளி ஆட்கொண்டான். அவனே தன் அடியார்களுக்கு தன் மணம் கமழ் தெய்வத்து இள நலங்காட்டி அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என அன்புடை நன்மொழி அளையும் நண்பனாகவும் இருக்கிறான்.

thiruchendur temple
Thiruchendur Temple

இந்த நன்னாட்களில் அவனுடைய சரண கமலாலயத்தை ஒரு அரை நிமிடம் சிந்தித்து நற்கதி அடைவோம்.

vayalur murugan temple
Vayalur Murugan Temple

அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்
நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!