திருவரங்கம், திருக்கோழி, திருக்கரம்ப னூரோடு
திருவெள் ளரையும், அன்பில்
திருப்பேரூர், காண்டியூர், கூடலூர், கபிஸ்தலம்
திகழ்புள்ளம் பூத்தாங் குடியும், (10)
ஓதறிய ஆதனூர், ஒப்பிலாத் திருக்குடந்தை,
ஒப்பிலி யப்பன் கோவில்,
மாதரசி நாச்சியார் மணிக்கோவில், திருச்சேரை
மதியில் திருக்கண்ண மங்கை, (16)
வேதரியக் கண்ணபுரம், திருக்கண்ணங் குடி, நாகை
விரிதஞ்சை, திருநந்தீ புர
விண்ணகரம், வெள்ளியங் குடி,தேர் எழூந்தூர்,
வினையவிழ் சிறுப் புலியூர், (24)
காலமறி தலைச்செங் காடு,அறி இந்தலூர்,
காவளம் பாடி எனவும்,
கவின்மிகு சீர்காழி, அரிமேய விண்ணகரம்
கலைவண் புருஷோத்த மம், (30)
திருச்செம்பொன் செய்கோவில், திருமணி மாடக்கோவில்
திகழ் வைகுந்த விண்ணகரமும்,
திருவாலித் திருநகரி, திருத்தேவ னார்த் தோகை,
திருத்தெற்றி அம்பல மதுவும் (36)
திருமணிக் கூடமும், திருஅண்ணன் கோவிலும்,
திருத்தமிகு பார்த்தன் பள்ளி,
தீதறு சிதம்பரமும், திருவாஹீந்திர புரமும்,
திருக் கோவலூரின் அழகும் (42)
அத்திகிரி கச்சியும், அழகுநகர் காஞ்சியும்
ஆயதிருத் தங்கையுடனே
அருள்திரு வேளுகை, திருநீரகம், பாடகம்,
திருநிலாத் திங்கட் துண்டம், (49)
திருஊரகம், திருவெக்கா, திருகாரகம், கார்வானம்,
திருக்கள்வனூர், பவள வண்ணம்,
திருப்பரம ஈஸ்வர விண்ணகரம், திருப்புக்குழி,
திருநின்ற ஊரென்பதும் (58)
திருவள்ளூர், திருவல்லிக் கேணி,திரு நீர்மலை,
திருவிடெந்தை, திருக்கடல்மலை,
திருக்கடிகை எனும்சோழ சிம்ம புரம் ஆகியத்
திருத்தல வரிசையில் சேர் (64)
திருவை குந்தமொடு, திருவனமா மலையும்,
திருத்தொலை வில்லி மங்களம்,
திருகருங்குடி,வர குணமங்கை, புலிங்குடி, திருக்கோளூர்
திருக்குழந்தை எனப் பரந்தும் (72)
தென்திருப் பேரையும், ஆழ்வார் திருநகரி,
திருவில்லிப் புத்தூர் அறியும்,
பண்திருத் தாங்கலும், திருக்கூடல், திருமோகூர்,
பழந்திருமா லிருஞ் சோலையும் (79)
திருப்புல் லானியும், திருக்கோஷ்டி ஊரும்,
திருமையம் ஆகியரு ளும்
திருநாவாய் ஆகவும் திருவித்துவக் கோடு,
திருக்காட்கரை, மூழிக்களமும் (86),
வல்லவாழ், கதித்தானம்,செங்குன்றனூர், திருப்புலியூர்,
வாறன் விளை, திருவட்டாறு,
வண்வண்டூர், வளர்திருவ னந்தபுரம், உயர்திரு
வண்பர சாரம் எனவும் (95)
திருநைமி சாரண்யம், திருப்பிருதி, பத்ரிநாத்,
திருக்காண்டம் கடிநகருடன்,
பெருநகர் அயோத்தி, வடமதுரா, துவாரகை,
திருஆயர் பாடி எனவும் (103)
சாலகிராமமும், சிங்கவேல் குன்ற மெனும்
மூலம் அஹோபில மும்,
திருப்பதியும், வ்யூகமாம் திருப்பாற் கடலும்
திருவடியாம் பரமபதமும் (108)
திவ்விய தேசமெனத் தெளிவுறுக! காதலினால்
கவ்வி மனம் கனிந்துருகி
இவ்விட மெலாம்அடைக! விடமழிக! விடைபெறுக!
அவ்விதமே அவனின் அருள்!