முள்ளங்கியை துருவி கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இரண்டையும் கலக்கி அளக்கவும். இந்த கலவை அளவுக்கு கடலை மாவு + அரிசி மாவை சரிசமமாக கலக்கி துருவலுடன் சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள் போடவும். முள்ளங்கி தண்ணீர் விடும். அதே தண்ணீரில் மாவை பிசையவும். தனியாக தண்ணீர் வேண்டாம். பிறகு எண்ணெய் வைத்து போண்டாவை கிள்ளி போடவும்.