ஆவணிஅவிட்டம் என்றால் வெறுமனே பூணல் மாற்றிக்கொள்ளவேணும்,காமோகாரிசத் என்று ஒருமந்திரம் காலையில் சொல்லனும் பின்பு இட்லியோ டிபனோ சாப்பிடனும் பின்பு ஒருசங்கல்பம் சொல்லி தீர்ததமாடி புதுபூணல் போட்டுக்கனும் அரிசிமற்றும் எள்ளால் ரிஷிதர்பணம் பிதுர்தர்பணம் ( அப்பா இல்லாதவர்கள்) பண்ணனும், பின்னர் விருந்து. சாப்பிடனும் அவ்வளவுதான் ஆவணிஅவிட்டம் என நம்மில் பலரும் நினைக்கிறார்கள். ஆவணிஅவிட்டம் என்பது என்ன?

ஆவணி அவிட்டம் என்பது நம் வேதத்திற்கான ஒரு பண்டிகை. இதை பூர்வர்கள் ஆவணிஅவிட்டம் ....உபாகர்மா என்பர், புது பூணூல் மாற்றிகொள்வது என்பது ஓரளவிற்கு உணமையாக இருந்தாலும் உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பலஅபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பதுதான் உண்மையானஒன்று. புராதனமான (ப்ராசீனமான) நமது வைதிக சம்ப்ரதாயத்தில் ஆவணிஅவிட்டம் பண்டிக விழாக கொண்டாடுவது வழக்கம்..ஒவ்வொரு பண்டிகைகைக்கும் ஒருமுக்கியத்துவம் அதுமாதிரி வேதத்திற்காக மட்டுமே ஒரு பண்டிகை உண்டு என்றால் அது உபாகர்மா எனும் இந்த ஆவணிஅவிட்ட பண்டிகைதான் ஆவணியாவிட்டம் என்றுசொல்லப்படும் இந்தபண்டிகை வேதத்தை தவிர வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை.

சரி, இதனை உபாகர்மா எனகூறாமல் ஆவணிஅவிட்டம் எனகூறுவதேன்?

பொதுவாக ஆவணிமாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகைவருவதால் இதற்கு ஆவணி ஆவணிஅவிட்டம் என்று ஒருபெயர் வந்திருக்கலாம். மேலும் ச்ரவணமாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும்ஒருபெயர்உண்டு. உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர். உபாகர்மா என்றால் என்ன?

உபாகர்மா என்றவார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம்அதாவது வேதாரம்பம். இதனை

”ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்யமாஸ ப்ரதோஷேந அதீயீததேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வாவிரமேத்”

என்று ஆபஸ்தம்பர்கூறுகிறார்.

அதாவது ஸ்லோகத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமாகையால் ப்ரஹ்மச்சாரிக்கும் பண்டிகை ஆரம்பிக்கவேண்டிய நன்னாள். அதாவது வேதாரம்பம் செய்ய உகந்தநாள் என்பது ஆகும். வேதஆரம்பம் என்றால் வேத்த்திற்க்கு முடிவுஉண்டா? இல்லை தோஷம்உண்டாம். அதைபோக்கி பின்பு மீண்டும் வேதஆரம்பம் செய்யனுமாம் வேதத்திற்க்கு தோஷமா ? ஆம் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம் (அதாவதுமீந்து போய் ஜெலம்விட்டஆகாரத்தை 'பழையது’ எனசொல்லுகிறோம் அல்லவா அதுமாதிரியானது இந்த யாதயாமதோஷம்). இந்ததோஷம் நீங்கவே ஆவணிஅவிட்டம் என்னும் உபாகர்மா செய்யப்படுகின்றது. வேதத்திற்குபோய் ‘பழையது ' என்ற தோஷம்எப்படிவரும் எனும் சந்தேகம் நமக்குவந்தால் அது நியாயம்தான் வேதத்திற்கு இயற்கையாக எந்ததோஷமும் வராது. நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் (ரிஷிகளோ மகான்களோஅல்ல ) வேதத்தை பாராயணம் செய்வதனால்அதற்குஅப்படி ஒருதோஷம் வருகிறதாம். உதாரணத்திற்கு நாம் வழிபடும் கோவில்களை எடுத்துக்கொள்வோம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் பவித்ரோத்ஸவம் எனநாம் ஏன்செய்கின்றோம் அந்தகோவிலில் நடந்தவிழாக்களில் உச்சரித்த மந்திர அபசாரம் நித்தியகைங்கர்யத்தில் ஆசாரகுறைவுதெரியாத தந்திர அபசாரம் என பலவற்றுக்கு பரிகாரம் காணவேண்டி செய்கிறோம். அதேபோல் வேதத்தை நாம் உச்சரிப்பதில் ஏற்பட்டகுறை, ஒதுவதில் பின்னம் அடைந்த குறை சொல்லுவதில் அக்கறையின்மை வேகமாக சொல்லுதல் என பலவிதமாக நாம்செய்த அபசாரங்களை போக்கவே இந்த உபாகர்மா என்னும்ஆவணிஅவிட்டம்.

இந்தஉபாகர்மா வைபவத்தில் நாம்மட்டுமல்ல பகவானை தவிர முப்பத்து முக்கோடி தேவர்களும் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். வேதத்தை பிரம்மனோ ரிஷிகளோ இயற்றவில்லை என்பது நம்எல்லோருக்கும் தெரிந்ததே. ஸர்வஞ்னான பகவான் ஸங்கல்பத்தால் உருவானது என அந்த வேதமே கூறுகின்றது

அதற்கானவாக்யம்: “ஸோகாமாயத! பஹுஸ்யாம்ப்ரஜாயேயேதி !” பகவானின் அறிவான அந்த வேதத்தை அவர் முதன் முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார். எப்படிஉபதேசித்தார்? உபதேசம் செய்தார் என்னும் போது வாயால் உபதேசித்ததாக நினைக்கவேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார்.

ப்ரஹ்மாவிற்கு பிறகு அவரது வழிதொன்றல்களான ப்ரஜாபதிகள் முப்பத்து முக்கோடிதேவர்கள் முதலானவர்கள் ‘சந்தை’ ‘திருவை’ என தினமும் சொல்லி வேதத்தை தங்களிடம் வரப்படுத்தினார்கள்.

ப்ரஹ்மாபகவானிடமிருத்து வேதத்தை உபதேசம் பெற்றநாள் இன்றுதான் ( ஆவணிஅவிட்டம் அன்றுதான்)

ஆதலால் இதுவேதத்தின் ‘உதித்த நாளாக்கான விழாவாகவும்’ கொள்ளலாம். வேதத்தை கற்றவர்கள் யாராயினும் பகவானை தவிர வேதாத்யயனம் செய்தவர்கள் உபாகர்மாசெய்து வேதம் சொன்னால் தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம்சொல்லுகின்றது. நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்குஉண்டா? “’ என்று சிலர்கேட்பது அடியேன்காதில் விழுகிறது தேவரீர்கள் வேதாத்யயனம் செய்யாமலிருக்கலா வேதத்திற்கு மஹிமை உண்டு எனசாஸ்திரம் சொல்லுகின்றது. ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும் எதற்க்காக?

அதாவது நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள் மேலும் உச்சாடனம் செய்யும் காயத்ரிமந்திரம் நாம்கலந்துகொள்ளும் பூஜை புனஸ்காரங்களில வரும்மந்திரங்கள்நாம்செய்யும் பிதுர்ச்ம்ராத்தம் போன்ற கார்யங்களில்வரும்மந்திரங்கள் என நாம் வருஷம் முழுவதும் பலமுறை பலவித மந்திரங்களை சொல்ல வேண்டியதுள்ளது/ இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தேஆக வேண்டும். அதாவது நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்திவர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆகவேண்டும் என்கிறது சாஸ்திரம இப்போது புரிகிற ஆவணிஅவிட்ட உபாகர்மாவுக்கும் வேத ஆரம்பத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளதுஎன.

பொதுவாக பிராமணர்களில் ஒருவனுக்கு உபநயனம்ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது/ அதாவது பூணூல்மற்றும் ப்ரம்மோபதேசம் ஆனமாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்கயோக்யதை வருவதில்லை அந்த பிரம்மசாரி முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆனபிறகு தான் வேதம்கற்கின்ற யோக்யதை வருகின்றது.

உபாகர்மா அன்று நாம்செய்யும் சில வைதிக கர்மாக்களில் வரும் சிலஅற்புதமான விஷயங்கள் ஒருகிளான்ஸ்.

முதலில் ஒருநூதன யக்ஞோபவீததாரணம் ஏற்கனவே நாம்கூறியபடி வேதஆரம்பம் என்று ஒன்று இருந்தால் வேதமுடிவு அதாவது ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும்இருக்கவேண்டும்இல்லையா. வேதத்தைய தோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிகமிககுறைவு. ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக ‘காமோகர்ஷீத்...’ என்கின்றஜபத்தை இன்றய தினம் செய்கிறோம். ஏனெனில் 'காமோகர்ஷித்.. என்ற ஜெபம் ஒருசர்வ பாபப்ராயஸ் சித்தமந்திரமாகவும் விளங்குகின்றது.

அதன்பின் மந்திரங்களை நமக்கு பிரம்மாவிடம் இருந்து ஆதியில் பெற்றுதந்த ரிஷிகளையும் தேவதைகளையும் சங்கல்பத்தால் பூஜித்து அவர்களது தபசக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை பெறவேண்டி இந்த ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பதுபேர்களுக்கு காண்டரிஷிதர்ப்பணம் செய்கிறோம். அதனை தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் இன்றய ஆவணி அவிட்டஉபாகர்மா அன்று சொல்லப்பட்டும் மஹாஸங்கல்பம் மிகவும்உயர்ந்தது. அந்தசங்கல்பத்தில் நாம்செய்த செய்யபோகிறபலபாவங்களும் மனசால் வாக்கால் செய்த தவறான செயல்களுக்கும் நம்இந்திரியங்களால் செய்ததோஷங்களும் நீங்குவதற்கான விசேஷ சங்கல்ப பிரார்த்தனை வாக்யங்கள்கொண்டது. இந்தஸங்கல்பத்தை பக்திச்ரத்தையோடு சொல்லுவதால் செய்த பாவம் விலகி நல்ல பலனை சொல்லுபவர்களுக்கு அளிக்கும் அந்தசங்கல்பத்தில் பலதேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும் புண்யக்ஷேத்ரங்களையும் புண்ய நதிகளையும் நாம் நிணைவிற்கு கொண்டு வந்து சங்கல்பம் செய்யவேணும். ஏன்செய்யவேணும்?

நாம்செய்யும்காரியங்களின்பலன்நமக்குஉறுதியாக கிட்ட வேண்டுமானால் அதாவது அந்த வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக மாறி நமக்கும் பிதுர்களுக்கும் சந்ததிகளுக்கும் ஸ்ரேயஸ் அளிக்கவேண்டும் எனநாம் நினைத்தால் கண்டிப்பாக ஆவணி அவிட்ட நாளில் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்யவேண்டும். இதை செய்வதால் நம்மிடமிருக்கும் அல்லது நமக்கு தெரிந்த சொல்ப வேதமந்திரமானது அதனது வீர்யத்தோடு நம்முடன் கூடியதாகயிருக்கும் அதன் மூலம் நற்பலனை நமக்கு சேர்க்கும்.

ஆவணிஅவிட்டத்தை செய்து வீரியத்துடன் அந்தஅந்த வருடங்களில்நாம் செய்யும் கர்மாக்களின் பலனைபெற்று உய்வோமா?

Resource: Panichara Iyappan,Ramanuja.Org